Nayanthara: காருக்கு பின்னால்... சூர்யா படத்துக்காக நயன்தாரா அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தாரா? பிரபலம் சொன்ன சீக்ரெட்!
தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் நயன்தாரா. இவரும் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார் என்று சினிமா பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
சரத்குமார் நடிப்பில் வெளியான 'ஐயா' படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நயன்தாரா. இந்தப் படத்தில் ஹோம்லி லுக்கில் நடித்திருந்த நயன்தாரா, அதன் பிறகு கிளாமராக நடிக்க தொடங்கினார்.
சந்திரமுகி, கஜினி, ஈ, தலைமகன், வல்லவன், பில்லா, ஏகன், வில்லு, ஆதவன், ராஜா ராணி, ஆரம்பம், தனி ஒருவன், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், தர்பார், பிகில், ஜவான், இறைவன், அன்னபூரணி என்று கடந்த 20 வருடங்களில் சுமார் 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, இங்கிலீஸ் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நயன்தாரா, தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, ராக்காயி, மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர டியர் ஸ்டூடண்ட்ஸ், எம்எம்எம்என் (தற்காலிகமான டைட்டில்) ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து, ஹிட் கொடுப்பதில் நயன்தாரா சிறந்த நடிகையாக திகழ்கிறார். இவர் தேர்வு செய்யும் கதைகள் பெரும்பாலும் அவருக்கு ஹிட் படங்களாக அமைந்துவிடுகின்றன. இந்த நிலையில் தான் சினிமா பத்திரிக்கையாளரான அந்தணன் சினிமாவில் நயன்தாரா அட்ஜெஸ்ட் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் தான் கஜினி. இந்தப் படட்தின் படப்பிடிப்பின் போது வில்லன்கள் நயன்தாராவை துரத்துவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது நயன்தாரா ஓடி வருவதை பார்த்த முருகதாஸ் அந்த காட்சி முடிக்கப்படுவதற்கு முன்னதாகவே கட் சொல்லிவிட்டார். அதற்கு காரணம் அந்த காட்சியின் போது நயன்தாரா அணிருந்திருந்த உடை சற்று ஆபாசமாக இருந்திருக்கிறது.
இதனால், அந்த காட்சிக்கு நயன்தாராவை வேறு உடை அணிந்து வர வற்புறுத்தியுள்ளார். ஆனால், நயன்தாரா மாற்று உடை கொண்டு வரவில்லை, பின்னர் வேறு வழியில்லாமல் உதவியாளர் சென்று பிளாட்பாரத்தில் விற்கும் ஒரு உடையை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த இடத்தில் கேரவனும் இல்லை என்பதால் அங்கு நின்றிருந்த காருக்கு பின்புறம் சென்று நயன்தாரா தனது உடையை மாற்றிக் கொண்டு கஜினி படத்திற்காக சில அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் செய்து தான் நயன்தாரா ஆரம்ப காலத்தில் நடித்துள்ளார் என கூறியுள்ளார்.