Ajithkumar : நண்பரின் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்த விஜய்.. தந்தையின் உடலை தகனம் செய்த அஜித்!
அஜித்தின் தந்தையான சுப்பிரமணியம், கடந்த நான்கு ஆண்டு காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவருக்கு அனூப் குமார், அஜித் குமார் மற்றும் அனில் குமார் என மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை காண, நடிகர் அஜித் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்தார்.
தந்தயின் இறப்பிற்கு பின், அவர் குடும்பத்தினர் தரப்பில் செய்தி அறிக்கை வெளியானது. இதில், எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துக்கொண்டு, இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். உங்கள் இறங்களை மின்னஞ்சலில் தெரிவியுங்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது அஜித்தின் தந்தையின் உடல் பெசண்ட் நகரில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
லியோ படப்பிடிப்பு முடிந்த பின், நேற்று சென்னை வந்த விஜய், அஜித்தின் இல்லதிற்கு சென்று இறங்கள் தெருவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -