John wick 4 Review : இது ஹாலிவுட்டின் பெரிய சம்பவம்..ஜான் விக் 4ஆம் பாகத்தின் குட்டி விமர்சனம் இதோ!
ஜான் விக்கின் தலைக்கு 40 மில்லியன் டாலர் சன்மானம்… ஜானை அழித்தே ஆக வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இறங்கியுள்ள புது வில்லன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த கொலைகார கூட்டத்திடமிருந்து தனது சுதந்திரத்திற்காக நெடுநாட்களாக போராடும் ஹீராே.. ஜானிற்கு வேண்டிய சுதந்திரம் அவருக்கு கிடைத்ததா? ஜானை உயிரோடு அந்த வில்லன் விட்டு வைத்தானா? போன்ற கேள்விகளுக்கு ஆக்ஷன் விருந்துடன் பதிலாக வருகிறது திரைக்கதை.
ஜான் விக் படத்தில் ஹீரோ கியானு ரீவ்ஸிற்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் அப்படத்தில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சிகளுக்கும் இருக்கிறது.
ஜான் விக் படம், பாகத்திற்கு பாகம் மெருகேறிக்கொண்டே வருகிறது என்றும் இதில் உள்ள நடிகர்களின் பங்களிப்பு அபரிமிதமானது என்பதுதான் ஜான் விக் பட ரசிகர்களின் கருத்தாகும்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை, பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு ஏற்ற ஆக்ஷன் விருந்தாக இப்படம் அமைந்துள்ளது
சில ஆக்ஷன் படங்களை போல இந்த படத்திலும் சில லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஜான் விக், எவ்வளவு அடிச்சாலும் மீண்டு வருவார் என்பது அனைவரும் அறிந்த கதை. அதற்கென்று மீண்டும் மீண்டுமா வருவது..?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -