Sengalam Web Series Review : நம்ம ஊரின் அரசியல் நிகழ்வுகளை கண்முன் காட்டிய செங்களம் வெப் சீரிஸ்..எப்படி இருக்கு வாணி போஜனின் புது அவதாரம்?
கதையின் கரு : நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆசைப்படும் அரசியல் ஓநாய்கள்…3 கொலைகளை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் அண்ணன் தம்பிகள், இன்னும் 2 கொலை செய்ய உள்ளதாக போலீசிடமே சவால் விடுகின்றனர்..யார் இவர்கள்? நகராட்சி மன்ற தலைவர் சீட்டிற்கும் இவர்கள் செய்யும் கொலைகளுக்கும் என்ன சம்மந்தம்? விவரிக்கிறது செங்களம் தொடர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெங்களம் தொடர், முதல் எபிசோடிலிருந்து கடைசி எபிசோடு வரை, “அன்று ஒரு நாள்” “இன்று” என ஃப்ளேஷ்பேக்கிலும் நிகழ் காலத்திலும் பயணிப்பது போன்று காட்சி படுத்தப்பட்டுள்ளது. கதையின் முதல் நான்கு எபிசோடுகள் திருமணம், மரணம், கொலை என பயணிப்பதால் வேகமாகச்செல்கிறது
இதையடுத்து வரும் எபிசோடுகிளில் அரசியல் ஆதாயங்கள், பதவி ஆசை, அதற்காக செய்யப்படும் குற்றச்செயல்கள் என காண்பிக்கப்படுகின்றன. இதனால், 6ஆவது எபிசோடு வரை செங்கலம் எந்த வித வேக தடையுமின்றி ஹை ஸ்பீடில் செல்கிறது
வாணி போஜனின் அரசியல் ஆசைக்குப்பின்னர், கதை சூடு பிடிக்கும் என்று பார்த்தால் அதற்கு அப்படியே நேர்மாறாக ரசிகர்களை தொய்வடையச் செய்கிறது. தொடரில், தமிழ்நாட்டின் அரசியலை ஆங்காங்கே குறியீடுகளாக வைத்துள்ளது, ரசிகர்களை ஈர்த்துள்ளது
இத்தொடரில் கலையரசன், வாணி போஜன், பவன், சரத் லோகிதஸ்வா, விஜி சந்திரசேகர்போன்ற பல நட்சத்திரங்கள் உள்ளனர். அவர்களின் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப அனைவருக்கும் சமமான ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும், தங்களது கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற பணியை செவ்வனே செய்து கொடுத்திருக்கின்றனர்
மொத்தத்தில், கொஞ்சம் பொறுமையாக பார்த்தால், கடந்த 30 வருடங்களில் நம்ம ஊரில் நடைப்பெற்ற அரசியல் சம்பவங்களை கண்முன் நிறுத்தி விடுகிறது செங்களம் தொடர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -