முதல் முறையாக சிஎஸ்கே போட்டியை குடும்பத்தோடு கண்டு ரசித்த அஜித்..! கம்பெனி கொடுத்த சிவகார்த்திகேயன்!
பொதுவாகவே சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி என்றாலே அங்கு சினிமா பிரபலங்கள் இருப்பார்கள். சென்னையின் கோட்டையான சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க சினிமாவின் உச்சநட்சத்திர நடிகரான அஜித் தனது குடும்பத்தோடு வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனும் மேச்ட் பார்க்க வந்திருக்கிறார். அப்போது அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டு இருவரும் அருகருகில் அமர்ந்து சிஎஸ்கே பேட்டிங் செய்வதை கண்டு ரசித்துள்ளனர்.
இதுவரையில் அஜித் சென்னை போட்டியை பார்க்க வந்தது கிடையாது. இப்போது முதல் முறையாக போட்டியை பார்க்க வந்துள்ளார். இது கிரிக்கெட் மட்டுமின்றி சினிமா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கார் ரேஸில் 2ஆவது இடம் பிடித்து சாதனை படைத்திருந்தார். அதுமட்டுமின்றி நேற்று தனது 25ஆவது திருமண நாளை மனைவியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழந்தார்.
சேப்பாக்கத்தில் நடந்து வரும் இந்த மேட்ச்சை பார்க்க, ஷாலினி, ஆத்விக், அனோஸ்காவோடு விசிட் அடித்துள்ளார் அஜித். மேலும், ஷாலினியின் சகோதரர் ரிச்சர்டும் போட்டியை கண்டு ரசித்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசனும் போட்டியை பார்க்க வந்துள்ளார். அபோது ஹைதராபாத் வீரர்கள் தங்களது விக்கெட்டை பறிகொடுக்கும் போதும் விசில் அடித்து ஆரவாரம் செய்தார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் எடுத்தார். அறிமுக வீரர் டெவால்ட் பிரேவிஸ் அதிரடியாக விளையாடி 4 சிக்ஸர் ஒரு பவுண்டரி உள்பட 42 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். கடைசியில் வந்த தீபக் கூடா 22 ரன்கள் எடுத்துக் கொடுக்கவே சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. இது தோனியின் 400ஆவது டி20 போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 155 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது. தற்போது வரையில் 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.