Ajith Kumar Europe Trip : கண்டம் விட்டு கண்டம் தாண்டிய ஏகே..ட்ரெண்டாகும் ஷாலினியின் இன்ஸ்டா பதிவு!
கடந்த பொங்கல் பண்டியையொட்டி ஹெச்.வினோத் - அஜித் -போனி கபூர் கூட்டணியில் வெளியான படம் துணிவு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபின்னர் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி நிலவிய போது, லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தின் போஸ்டரை வெளியிட்டது. அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்க, அனிருத் இசை அமைப்பார் என்ற அப்டேட்டிற்கு பிறகு எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை.
அஜித்தின் மனைவியான ஷாலினி பதிவிடும் புகைப்படங்களை வைத்தே ஏகேவின் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
தற்போது பைக்கில் ஜெர்மனி, டென்மார்க், நார்வே ஆகிய ஐரோப்ப நாடுகளில் அஜித் வலம் வந்துக்கொண்டிருப்பதாக ஷாலினி பதிவிட்டுள்ளார்.
இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த பைக் ட்ரிப்பிற்கு பின்னர், விடாமுயற்சியின் ஷூட்டிங் தொடங்கிவிடும் என சொல்லப்படுகிறது.
அத்துடன் இன்று ட்விட்டர் பக்கத்தில், விடாமுயற்சி ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. 31 ஆண்டு கால சினிமா வாழ்வை கடந்த அஜித்திற்கு ஸ்பெஷல் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் சார்பாக வெளியாகவுள்ளது என்பது குறிப்படத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -