Anoushka Ajith: 16 வயதிலேயே ஹீரோயின் லுக்; அழகில் அம்மா ஷாலினியை மிஞ்சிய அஜித் மகள் அனோஷ்கா - லேட்டஸ்ட் போட்டோஸ்!
அஜித் பெரும்பாலும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விரும்ப மாட்டார். ஆனால் சில வருடங்களாக அஜித்துக்கு பதிலாக அவரின் மனைவி ஷாலினி தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் முக்கிய திருமணங்களில் கலந்து கொள்கிறார்.
அந்த வகையில், நடிகை நயன்தாரா திருமணத்தில் துவங்கி, அர்ஜுன் மகள் திருமணம், இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம் மற்றும் சமீபத்தில் நடந்த ஜெய்ராம் மகன் காளிதாஸ் வெட்டிங் ரிசப்ஷனில் கூட ஷாலினி மட்டுமே குழந்தைகளோடு கலந்து கொண்டார்.
அடிக்கடி, தன்னுடைய பிள்ளைகளுடன் ஷாலினி வெளி இடங்களுக்கு வர துவங்கி விட்டதால், அஜித்பிள்ளைகளின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை பிவி சிந்து மற்றும் தட்டா வெங்கடா சாய் என்பவருக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடந்தது.
இதில் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகனுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு ஷாலினி - அஜித் மகள் அனோஷ்கா மெரூன் கலர் உடையில், ஒரு தேவதை போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 16 வயதே ஆகும் அனோஷ்கா ஹீரோயின் போல் உள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.