Ajith Kumar: விடாமுயற்சி கெட்டப்பில் ரசிகர்களுடன் போட்டோ எடுத்த அஜித்! வைரலாகும் போட்டோஸ்!
படம் வெளியானாலும், வெளியாகாவிட்டாலும் ரசிகர்கள் கொண்டாடும் ஒரே ஒரு ஹீரோ அஜித் குமார் தான். தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவர். படங்களில் நடிப்பதோடு சரி, வேறு எந்த பொது நிகழ்ச்சியிலும் , படம் தொடர்பான இசை வெளியீட்டு விழா, புரோமோஷன் நிகழ்ச்சி என்று எதிலும் கலந்து கொள்ள மாட்டார். இதற்காக அக்ரீமெண்ட் போட்டு தான் படத்திலும் நடிப்பார் அஜித்.
கடைசியாக இவர் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியானது. இந்தப் படத்திற்கு பிறகு இப்போது 2 படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று தான் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துள்ள விடாமுயற்சி. அஜித்தின் 62-ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது.
மேலும் அஜித்தின் 63ஆவது படமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லீ' உருவாகியுள்ளது. இந்த படம் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும் விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ள த்ரிஷா தான் இந்த படத்திலும் தல-க்கு ஜோடியாக நடித்துள்ளார். பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் அஜித் தன்னுடைய ரோலுக்காக உடல் எடையை குறைத்திருக்கிறாராம். அதோடு வித்தியாசமான தோற்றத்தில் டாட்டூ எல்லாம் போட்டுக் கொண்டு இந்தப் படத்தில் அஜித் நடித்திருக்கிறார்.
'குட் பேட் அக்லீ' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும், அஜித்தின் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ள 'விடாமுயற்சி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ளது. இதற்காக அஜித் மற்றும் படக்குழுவினர் அங்கு சென்றிருந்தனர். ஏற்கனவே அஜித் மற்றும் த்ரிஷா அங்கிருந்தபோது எடுத்து கொண்ட புகைப்படம் வெளியான நிலையில், இப்போது அஜித் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் வெளியாகியுள்ளது.
செம்ம ஸ்டைலிஷாக வெள்ளை நிற ஷர்ட் மற்றும் கோட் சூட்டில் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் சில பிரபலங்களுடன் அஜித் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.