Aishwarya Rai : பொன்னியின் செல்வனுக்கு பின் மீண்டும் வில்லியாக நடிக்கப்போகிறாரா ஐஸ்வர்யா ராய்?
மாடலிங் துறையில் தன் வாழ்க்கையை தொடங்கிய் ஐஸ்வர்யா ராயிற்கு 1994 ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் உலக அழகி பட்டத்தை வென்றார். பின்னர், இயக்குநர் மணிரத்தினத்தின் இருவர் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஹிந்தி, தமிழ், பெங்காலி போன்ற மொழி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய் இந்தியா முழுவதுமின்றி உலகெங்கும் ஜொலித்தார்.
அனைத்து மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தாலும் அவருக்கு ஒத்துப்போகும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் க்ரே கதாப்பாத்திரமான நந்தினி வேடத்தில் நடித்தார். அது மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதனால் ஐஸ்வர்யாவிற்கு தற்போது தெலுங்கு படத்திலும் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் மூலம் பான் இந்திய ஸ்டாராக உருமாறிய ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இன்னும் பிரமாண்டமாக்க ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.