Aishwarya Rai : வித்தியாசமான உடை அணிந்து நெட்டிசன்களின் ட்ரோல் வலையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்!
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரத்தில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பல நாடுகளை சார்ந்த சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வர். இந்தியா சார்பில் ஐஸ்வர்யா ராய் உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்நிலையில், வித்தியாசமான உடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் தோன்றிய ஐஸ்வர்யா ராய் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கருப்பு மற்றும் சில்வர் நிற உடை அணிந்து கலந்து கொண்ட ஐஸ்வர்யா பலரின் கவனத்தை ஈர்த்தாலும் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
மேலும், 'சாதரணமான உடை அணிந்து அழகாக தோன்ற முடியாதா?' என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கூடுதலாக, ஐஸ்வர்யாவின் மாமனாரான அமிதாப் பச்சனின் புகைப்படம் ஒன்றுடன் ஐஸ்வர்யாவின் தோற்றத்தை ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர், இண்வாசிகள்.
ஐஸ்வர்யா ராய், இந்த வருடம் 19 ஆவது முறையாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -