Adipurush Trailer : அடுத்தவாரம் வெளியாகும் ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர்..ட்ரால் செய்ய காத்திருக்கும் நெட்டிசன்ஸ்!
2002 ஆம் ஆண்டில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான பிரபாஸ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
பின், 2015ல் வெளியான பாகுபலி படம், இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன் இரண்டாம் பாகம் எதிர்ப்பார்புகளை தாண்டி வெற்றி பெற்று, பிரபாஸை பான் இந்திய ஸ்டாராக மாற்றியது.
அதைதொடர்ந்து சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தார். இப்படங்கள் பெரும் வெற்றி பெறவில்லை என்றாலும் நம்பிக்கையை கைவிடாமல், சலார், ப்ராஜெக்ட் கே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஜூன் மாதத்தின் 16 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் டீசர் ட்ரால் செய்யப்பட்டது. பின்னர், அந்த டீசரின் புது வெர்ஷன் வெளியானது.
தற்போது மே 9 ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது.
இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக க்ருத்தி சனோனும், வில்லனாக சைஃப் அலி கானும் நடித்துள்ளனர்.