Tamil Cinema Couples : இயக்குநர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்!
இயக்குநர் மணிரத்தினம்- சுஹாசினி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.
முறை மாமன் படத்தில் ஒன்றாக பணியாற்றிய ஜோடி சுந்தர் சி - குஷ்பூ. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி 24 வருடங்கள் ஆகின்றது.
இயக்குநர் ராஜகுமாரனின் பல படங்களில் தேவயானி கதாநாயகியாக நடித்துள்ளார். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி ராஜகுமாரனை தேவயானி 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இயக்குநர் ஹரி- பிரீத்தா இருவரும் இணைத்து ஒன்றாக பணிபுரியவில்லை என்றாலும் 2002 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு பிரீத்தா படம் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரோஜாவை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. இவர்களுக்கு 2002 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
கோலிவுட்டின் இளம் ஜோடி அட்லீ - பிரியா. இவர்கள் காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
நானும் ரவுடி தான் படத்தின் மூலம் இணைந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் 2022 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு.