Vedhika : பேய் படத்திற்கு பிகினியில் ப்ரோமோஷன்...அநியாயம் பண்ணாதீங்க வேதிகா
மதராஸி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வேதிகா. ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி படத்தில் பலரது கவனத்தை ஈர்த்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாலா இயக்கிய பரதேசி படத்தில் தன்னால் கவர்ச்சிகரமான மாடல் மாதிரி இல்லாமல் நல்ல கதைகளிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தார். அந்த வகையில் வசந்தபாலன் காவியத்தலைவன் படமும் பாராட்டுக்களைப் பெற்றது.
தமிழ் , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும் வேதிகாவுக்கு பெரியளவில் பெயர் சொல்லும் படங்களை அமையவில்லை.
தற்போது ஃபியர் என்கிற தெலுங்கு ஹாரர் திரைப்படத்தில் நடித்துள்ளார் வேதிகா. பல்வேறு விருது விழாக்களில் கவனமீர்த்த இப்படம் 30க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது. வரும் டிசம்பர் 14 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் ரிலீஸூக்கு முன்பாக நடிகை வேதிகா மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார். தனது விடுமுறைகளை மிக அலாதியாக கழித்து வரும் அவர் சமூக வலைதளங்களில் பிகினியில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாக ஷேர் செய்யப்படுகின்றன. வெதிகா பேய் படத்திற்கு கூட இப்படி பிகினியின் வந்து ப்ரோமோஷன் பண்ணுகிறார் என்று நெட்டிசன்கள் நக்கலாக பதிவிட்டு வருகிறார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -