Sneha in GOAT : ‘விஜய்யுடன் இணைந்து நடிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது..’ சினேகா நெகிழ்ச்சி!
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.
லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது வெளியிடப்பட்ட போஸ்டர்கள் மூலம் தெரிகிறது. அதில் விஜய் நடிக்கும் ஒரு கேரக்டரின் ஜோடியாக புன்னகை அரசி சினேகா நடிக்க உள்ளார் என்ற அப்டேட்டை அவர் நிகழ்ச்சி ஒன்றில் கொடுத்துள்ளார்.
2003ம் ஆண்டு வெளியான 'வசீகரா' படத்திற்கு பிறகு 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் ஜோடியாக சினேகா 'GOAT' படத்தில் இணைய உள்ளார்.
'வசீகரா' படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார் சினேகா.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -