Sayyeshaa Photos : துபாயில் பொழுதை கழித்து வரும் கடைக்குட்டி சிங்கம் கண்ணுக்கினியாள்!
ஹிந்தி சினிமா குடும்ப பின்னணியை கொண்ட சாயிஷா “அகில்” எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.
பின்னர் சிவாய் என்ற ஹிந்தி படத்தில் நடித்த பின் ஜெயம் ரவியுடன் வனமகன் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி ஆகிய படங்களில் வரிசையாக நடித்தார். பத்து தல் படத்தில் “ராவரி” என்ற கமர்ஷியல் பாடலுக்கு நடனமாடினார்.
இவருக்கும் ஆர்யாவுக்கும் ஆன் ஸ்கிரீனில் தொடர்ந்த ரீல் காதல் ஆஃப் ஸ்கிரீனில் ரியலாக மாறியது. இவர்கள் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த ஜோடிக்கு அரியானா என்ற மகள் உள்ளார். குடும்பத்தினருடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாவில் பதிவிடுவார் சாயிஷா.
தற்போது இவர் துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த சில புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் சாயிஷா.