13 வயசில் அறிமுகம்; கிளாமரில் வேற மாறி நடித்து... தலைவரையே மிரட்டி பார்த்த இந்த நடிகை யார் தெரியுமா?
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 1983 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வெள்ளை மனசு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பார்த்த ஞாபகம் இல்லையோ, படிக்காதவன், முதல் வசந்தம் என்று பல படங்களில் நடித்திருந்தாலும் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த படையப்பா படம் நீலாம்பரியாக அடையாளம் காட்டியது. இந்தப் படத்தில் அவரது ஸ்டைல், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரஜினிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இந்தப் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவரை வேறு ரேஞ்சுக்கு கொண்டு சென்றது.
தனது 13 வயது முதல் சினிமாவில் நடிக்க வந்த ரம்யா கிருஷ்ணன் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான் படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம், குச்சிப்புடி ஆகிய கலைகளை கற்று தேர்ந்துள்ளார். படையப்பா படம் போன்றே தெலுங்கு சினிமாவில் வெளியான பாகுபலி ரம்யா கிருஷ்ணனுக்கு சிறந்த படமாக அமைந்தது. இந்தப் படம் ரசிகர்களுக்கு பல விருதுகளை பெற்றுக் கொடுத்தது.
சினிமாவில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் போது வம்ஷி என்பவரை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் கூட சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவிலும், சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் ரம்யா கிருஷ்ணனின் குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் தனது அம்மா மற்றும் சகோதரி ஆகியோருடன் இருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன் கடைசி 4 ஆண்டுகளில் சூப்பர் டீலக்ஸ், தேவ், வந்தா ராஜாவாதான் வருவேன் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று தெலுங்கில் குண்டூர் காரம் மற்றும் புருஷோத்தமுடு ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளார். மற்ற மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். நடிப்பு மட்டும் இன்றி தொழிலதிபராகவும் உள்ள ரம்யா கிருஷ்ணன், கேரளாவில் 3 நகை கடை மற்றும் சில பியூட் பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.