HBD Rambha : அழகிய லைலா... இது அவளது ஸ்டைலா... புயலாய் வீசிய ரம்பாவின் பிறந்தநாள் இன்று!
லாவண்யா யுவராஜ் | 05 Jun 2024 05:06 PM (IST)
1
தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா.
2
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்த ரம்பாவின் இயற்பெயர் விஜயலக்ஷ்மி.
3
1993ம் ஆண்டு வெளியான 'ஆ ஒக்கட்டி அடக்கு' என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.
4
தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்த 'உள்ளதை அள்ளித்தா' படம் தான் தமிழில் அறிமுகமான முதல் படம்.
5
பிரபு, கார்த்திக், அப்பாஸ், விஜய், அஜித், ரஜினி, சரத்குமார், பிரபுதேவா என முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார்.
6
தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமின்றி ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
7
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்ப தலைவியாக மாறிவிட்டார்.
8
என்றென்றும் கியூட் நடிகை ரம்பாவின் 48வது பிறந்தநாள் இன்று.