Mayandi Kudumbathar : 15 ஆண்டுகளை நிறைவு செய்த மாயாண்டி குடும்பத்தார்!
லாவண்யா யுவராஜ் | 05 Jun 2024 03:12 PM (IST)
1
தமிழ் சினிமாவில் முதல்முறையாக 10 இயக்குநர்கள் ஒன்றாக சேர்ந்து நடித்த திரைப்படம் 'மாயாண்டி குடும்பத்தார்'.
2
ராசு மதுரவன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியானது. யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
3
மாயமாகி வரும் கூட்டுகுடும்பங்களை பற்றியும் அதை அவசியத்தை பற்றியும் உணர்ச்சியோடு பதிவு செய்த திரைப்படம்.
4
தமிழக அரசின் சிறந்த படங்களின் பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்தது.
5
குடும்ப கதையையும் பங்காளி சண்டையையும் நேரடியாக வெளிப்படுத்திய திரைப்படம்.
6
இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றும் அதில் முதல் பாகத்தில் நடித்த சிலர் இதிலும் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.