Priyamani : பருத்திவீரன் படப் புகழ் பிரியாமணி முத்தக்காட்சிகளில் நடிக்காததற்கு இதுதான் காரணம்!
கேரளாவைச் சேர்ந்த பிரியாமணி கடந்த 2004 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
பின்னர் மது, மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
2007 ஆம் ஆண்டு பிரியாமணி ஹீரோயினாக நடித்து வெளியான பருத்தி வீரன் படத்திற்காக, அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
நடிகை பிரியாமணி 2017 ஆம் ஆண்டு முஸ்தாபா ராஜ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில் பிரியாமணி படங்களில் லிப் லாக் காட்சிகளிலும் நெருக்கமான காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்பதில் தெளிவாக இருப்பேன் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர்,முத்தமிடுவது என்னுடைய கேரக்டரின் ஒரு பகுதி தான் என தெரிந்தபோதும், என்னால் திரையில் சக நடிகர்களுடன் முத்தமிட முடியாது. கணவர் மற்றும் குடும்பத்தை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.” என கூறினார்.
தற்போது இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது