Priya Anand: ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது.. பர்த்டே பேபி பிரியா ஆனந்த் ஆல்பம்!
தமிழ் திரையுலகில் அறிமுகமான நாள் முதல் இன்று வரை க்யூட்னஸ் குறையாமல் வலம் வருபவர் பிரியா ஆனந்த்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2009ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'வாமனன்' மற்றும் தெலுங்கில் வெளியான 'லீடர்' திரைப்படத்தில் என, தமிழ் மற்றும் என தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானார்.
2012ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படத்தில் அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆச்சு அசலாக அமெரிக்க பெண்ணை போல தோற்றமளிக்கும் துணை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
மயிலாடுதுறையில் பிறந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமின்றி ஆங்கிலம், மராத்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்.
மாடர்ன் கேர்ள், குடும்ப பாங்கான கதாபாத்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்க கூடிய பிரியா ஆனந்த் நடித்த எதிர் நீச்சல், எல்.கே.ஜி, வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தன.
அமெரிக்காவில் அல்பானி பல்கலைக்கழகத்தில் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஜர்னலிசம் பட்டப்படிப்பை முடித்த பிரியா ஆனந்த் இந்தியா திரும்பியதும் மாடலிங் துறையில் நுழைந்து டைரி மில்க், மகா லாக்டோ, பிரின்ஸ் ஜூவல்லரி என ஏராளமான விளம்பரங்களில் நடித்து வந்தார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடித்துள்ளதாகத் தகவல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -