நடிகை பார்வதி நாயருக்கு திருமண நிச்சயம் ? இன்ஸ்டாகிராமில் வெளியான புகைப்படங்கள்
நிமிர்ந்து நில் , என்னைஅறிந்தால், உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். சமீபத்தில் வெளியான விஜயின் தி கோட் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.
அபுதாபி வாழ் மலையாள குடும்பத்தில் பிறந்த பார்வதி கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பாபின்சு என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
தனது 15 வயதில் பார்வதி நாயர் மாடலிங் கரியரை தொடர்ந்து வருகிறார்
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். திரைத்துறையில் எப்படியாவது தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் என போராடி வரும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதும் , இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாவதும் வழக்கம்
ஆனால் இந்த முறை பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண நிச்சய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
தனது நீண்ட நாள் காதலன் தொழிலதிபரான ஆஷ்ரித் அசோக் என்பவரை பார்வதி நாயர் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்
தனது வாழ்க்கையில் எல்லா ஏற்ற இறக்கங்களிலும் தனது காதலன் தன்னுடன் ஆதரவாக நின்றவர் என பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்