'அக்கா' புலிப்பல் செயின் அணிந்து.. ஸ்டைலிஷ் லுக்கில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகிறது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பொருந்தி நடிக்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பு ஆளுமையை வளர்த்து கொண்டுள்ளவர் தான் கீர்த்தி சுரேஷ்.
இதுவரை, திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்திய கீர்த்தி, வெப் சீரிஸ் பக்கமும் தன்னுடைய கவனத்தை திருப்பி உள்ளார். அந்த வகையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இவர் நடித்துள்ள 'அக்கா' வெப் தொடரின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதுவரை திரைப்படங்களில் கூட, வெளிப்படுத்திடாத தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பை இந்த அக்கா வெப் தொடரில் வெளிப்படுத்தியுள்ளார். கிட்ட தட்ட ஒரு பெண் தாதா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பின்னர், கீர்த்தி சுரேஷ் திரையுலகை விட்டு விலக போவதாக தகவல் வெளியான நிலையில்... கீர்த்தியின் இந்த ஒரு கதாபாத்திரம், இவருக்கான மார்க்கெட்டை கண்டிப்பாக தூக்கி நிறுத்தும் என தெரிகிறது.
இந்த வெப் தொடரில் கீர்த்தி, அணிந்திருந்த புலிப்பல் செயின். இவரை மற்றவர்களிடம் இருந்து தனித்துவமாக காட்டியது. தற்போது இந்த செயின் அணிந்து கீர்த்தி சுரேஷ் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
மாடர்ன் லுக்கில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து, மெல்லிய சேலையில் இவர் எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.