Actress Padmapriya : நடிகை முதல் பரதநாட்டிய கலைஞர் வரை....பன்முகத்தன்மை கொண்ட பத்ம பிரியாவின் பிறந்தநாள் இன்று...!
நடிகை, மாடல், பரநாட்டிய கலைஞர் என பல்வேறு முகங்களை கொண்டவர் பத்மபிரியா.
2003ஆம் ஆண்டு வெளியான சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்கி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். குறிப்பாக வொண்டர் வுமன் என்ற ஆங்கில படத்திலும் நடித்துள்ளார்.
தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், பட்டியல், சத்தம் போடதே ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும், 2007ல் வெளியான மிருகம் படத்தில் இவருக்கு தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது.
பத்மபிரியா நடித்த படங்களில் ஹிட்டான பாடல்கள் சிலவற்றிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அதன்படி, சத்தம் போடாதே படத்தில் அடங்காமலே..., தவமாய் தவமிருந்து படத்தில் உன்னை சரணடைந்தேன்..., பொக்கிஷம் படத்தில் நில நீ வானம் காற்று ஆகிய பாடல்கள் ஹிட்டானது.
இந்நிலையில் அவர் தனது 43வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.