அருவி பக்கத்தில் நின்று குளுகுளு கவர்ச்சியில் கிக் ஏற்றும் மாளவிகா மோகனன் போட்டோஸ்!

வந்த வேகத்தில் தமிழ் சினிமாவில் இருந்து மூட்டையை கட்டும் நடிகைகள் மத்தியில், மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைந்தவர் தான், மாளவிகா மோகனன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன், இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவரின் கதாபாத்திரம், கவனம் பெற்றாலும் ஆரம்பத்திலேயே இது போல் ஒரு ஹீரோயின் அல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என பலர் இவருக்கு அட்வைஸ் பண்ணியதாக அவரே கூறி உள்ளார்.
பலரின் யூகங்களை பொய்யாக்கும் விதத்தில், மாளவிகா மோகனன் இரண்டாவது படத்திலேயே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாளவிகா தளபதியுடன் நடித்த 'மாஸ்டர்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம், கொரோனா காலத்தில் வெளியானதால், திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடியில் ரிலீஸ் ஆனது.
கதை தேர்வில் அதிகம் கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன் நடிப்பில் கடைசியாக 'தங்கலான்' திரைப்படம் வெளியானது. இந்த திரைபடம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற தவறியது.
தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன் தற்போது, பாகுபலி நாயகன் பிரபாஸ்க்கு ஜோடியாக ராஜசாப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அருவி பக்கத்தில் நின்றபடி, கவர்ச்சி ததும்பி வழியும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -