Krithi Shetty : எனக்கு காதல் தொல்லையா? இல்லவே இல்லை.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த க்ரித்தி ஷெட்டி!
பிரபல நடிகரின் மகன் காதல் தொல்லை குடுத்து வருவதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appலிங்குசாமி இயக்கிய வாரியர் மற்றும் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படங்கள் வழியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் க்ரித்தி ஷெட்டி
இந்நிலையில், அண்மையில் க்ரித்தி ஷெட்டி கூறியதாகத் தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வந்தது.
அதாவது பிரபல ஸ்டார் நடிகர் ஒருவரின் மகன் க்ரித்தி ஷெட்டிக்கு காதல் தொல்லை கொடுத்து வருவதைப் பற்றிய தகவல் தான் இது.
க்ரித்தி செல்லும் இடங்களுக்கு எல்லாம் செல்வது, மேலும் குறிப்பிட்ட பொது இடங்களுக்கு வரச்சொல்லி, தன்னை காதலிக்கச் சொல்லி அந்நபர் க்ரித்திக்கு தொந்தரவு கொடுத்து வருவதாகவும் தகவல் பரவியது
“நான் எதுவும் பேச வேண்டாம் என்று பொறுமையாக இருந்து வந்தேன். ஆனால் இந்த விஷயம் இப்போது பூதாகரமாக வளர்ந்து விட்டிருக்கிறது. இதுமாதிரியான தவறான தகவல்களை பரப்புவதை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டு இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் க்ரித்தி ஷெட்டி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -