Keerthy Suresh: கோவா ஸ்டைலில் கிளுகிளுப்பான உடையில் வெட்டிங் பார்ட்டி கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் போட்டோஸ்!
தென்னிந்திய திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவருடன் நடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு திடீர் என தன்னுடைய திருமண தகவலை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த தகவல் குறித்து ஏற்கனவே சமூக வலைத்தளத்தில், தகவல் வெளியான நிலையில்... பின்னர் கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்ய வந்த போது, இந்த தகவலை உறுதி செய்தார்.
அதன்படி கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் 5 நாள் கொண்டாட்டமாக நடந்து முடிந்தது. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் கொடுத்த பேட்டியில், ஆண்டனி தட்டிலுடன் பல வருடங்களாக காதல் உறவு இருந்து வந்தாலும், தங்களை இணைத்தது கொரானா காலம் தான் என தெரிவித்தார்.
அதே நேரம், ஆண்டனி தட்டில் கிறிஸ்தவர் என்பதால் கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம் தெரிய வந்த நாளில் இருந்தே எதிர்ப்பு இருந்து வந்ததாகவும், அந்த எதிர்ப்புகளை சமாளித்து இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம் ஏற்கனவே சில பிரபலங்களுக்கு தெரிந்திருந்தாலும்... ரசிகர்களுக்கு மட்டும் லீக் செய்யாமல் இருந்தார். ஒருவழியாக திருமண உறவில் இணைந்துள்ள கீர்த்தி சுரேஷின் திருமணம் ஹிந்து மற்றும் கிருஸ்தவ முறைப்படி நடந்தது.
இதில் தளபதி விஜய், திரிஷா, மாளவிகா மோகனன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து, திருமணத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது வெட்டிங் பார்ட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதில் கொஞ்சம் ஹாட்டாக உடை அணிந்துள்ள கீர்த்தி சுரேஷ், கோவாவில் எப்படி கலர் கலராக உடை அணிந்திருப்பார்களோ அதே போல் கலக்கலாக உடை அணிந்து கலக்கியுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.