Keerthy Suresh Wedding Photos: 15 ஆண்டு கால காதல்...திருமண கோலத்தில் கீர்த்தி சுரேஷ்.. முகமெல்லாம் சிரிப்பு
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டில் இருவருக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது
தமிழ், தெலுங்கு , இந்தி என பல மொழிகளில் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் கோச்சியில் பள்ளி காலத்தில் இருந்து காதலித்து வந்தார்கள். 15 ஆண்டு காலம் நீடித்த இந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது
கீர்த்தி சுரேஷ் காதல் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகின. அவர் இசையமைப்பாளர் அனிருத்தை காதலிப்பதாக ஒருகட்டத்தில் இணையத்தில் பேசப்பட்டது. மேலும் நடிகர் விஷாலின் பெற்றோர்கள் கீர்த்தி சுரேஷை பெண் கேட்டுள்ளார்கள். ஆனால் தனது காதலனை தான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கீர்த்தி சுரேஷ் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இன்று டிசம்பர் 12 ஆம் தேதி கீர்த்தி ஆண்டனிக்கு கோவாவில் தங்கள் நெருங்கிய குடும்பத்தினர் மத்தியில் திருமணம் நடைபெற்றது. முதலில் இந்து முறைப்படியும் பின் கிறித்தவ முறைப்படியும் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது
தனது திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்
15 ஆண்டுகால காதலர்களாக இருந்த இருவரும் இனி கணவன் மனைவியாக புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்கள்.
கீர்த்தி மற்றும் ஆண்டனிக்கு திரையுலகினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்