✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Keerthy Suresh: காதல் கண் கட்டுதே..! கணவர் ஆண்டனி தட்டிலுடன் ரொமான்ஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ் - வைரல் போட்டோஸ்!

மணிகண்டன்   |  24 Jan 2025 11:31 PM (IST)
1

குழந்தைப் பருவம் முதலே சினிமாவில் நடித்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார்.

2

பைரவா, சர்கார் என்று விஜய் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார். பொதுவாக சினிமாவை எடுத்துக் கொண்டால் வளர்ந்து வரும் நடிகைகள் மாஸ் ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய் ஆகியோருடன் இணைந்து எப்படியாவது நடித்து விட வேண்டும் என்பது கனவாக இருக்கும்.

3

அப்படி கீர்த்தி சுரேஷிற்கும் அது கனவாக இருந்த நிலையில் எப்படியோ சிறுத்தை சிவா மூலமாக ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. விக்ரம், சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

4

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் நடித்துள்ளார். மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

5

இதைத் தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவே, கச்சிதமாக பிடித்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

6

இந்த நிலையில் தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே கேரளாவைச் சேர்ந்த ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து கரம் பிடித்தார்.

7

இருவரும் பள்ளிப் பருவம் முதலே பழகி வந்துள்ளனர். 15 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு கோவாவில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் விஜய், அட்லி, த்ரிஷா என்று சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

8

திருமணத்திற்கு பிறகு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட நிலையி அது வைரலாக பார்க்கப்பட்டது.

9

கீர்த்தி சுரேஷின் கணவர் துபாய் மற்றும் கொச்சியில் பிஸினஸ் செய்து வருகிறார். சொந்த ஊரில் ரிசார்ட்டுகளையும் நடத்தி வருகிறார்.

10

திருமணத்திற்கு பிறகு ஆண்டனி தட்டில் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து தங்களது முதல் பொங்கலை சென்னையில் கொண்டாடினர். தற்போது கமிட்டான படங்களில் மட்டும்கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். புதிதாக எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை.

11

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், ரிவால்வர் ரீட்டா மற்றும் கன்னி வெடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் இப்போது ஓய்வில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆண்டனி தட்டில் உடன் திருமணத்தின் போது ரொமான்டிக்காக எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

12

கடந்த ஒன்றரை மாதங்களாக கீர்த்தி சுரேஷ் தான் அடிக்கடி தலைப்பு செய்திகளில் வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷிற்கு நேர் மாறானவர் ஆண்டனி தட்டில்.

13

அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர் என்பதால் சோஷியல் மீடியாவிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கிறார். இனி வரும் காலங்களில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து சோஷியல் மீடியாவில் கலக்குவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Keerthy Suresh: காதல் கண் கட்டுதே..! கணவர் ஆண்டனி தட்டிலுடன் ரொமான்ஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ் - வைரல் போட்டோஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.