bhumika chawla:வைரலாகும் பூமிகா சாவ்லாவின் சமீபத்திய க்ளிக்ஸ்!
பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட பூமிகா, 2000ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த யுவகுடு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த பத்ரி படத்தில் நடித்த பூமிகா, அதே ஆண்டில் தெலுங்கில் வெளிவந்த குஷி படத்தின் மூலம் பெரிதாக பேசப்பட்டார்.
2006ம் ஆண்டு சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த பூமிகா, இளைஞர்கள் கொண்டாடும் ஐஸூவாக மாறினார். இவரது நடிப்பிற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த பூமிகா, ‘தோனி தி அன்டோல்டு ஸ்டோரி’, யூ டர்ன், கொலையுதிர் காலம், சீதா ராமம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
பூமிகா 2007ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு, சமூல வலைதங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
பூமிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும்படியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.