Cinema News: வேட்டையன் படத்தில் டப்பிங் பணிகள் தொடங்கியது; இன்றைய சினிமா செய்திகள் இதோ!
மகிழ் திருமேனி அஜித் குமாரை வைத்து இயக்கி வரும் விடாமுயற்சி படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியாகலாம் என்று தகவல் பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் படம் கூலி. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் , ரெபா மோனிகா, மாஸ்டர் மகேந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக நேர்கியா சினிமா வட்டங்கள் தெரிவிக்கின்றன.
ராஜு முருகன் இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் ஹீரோவாகவும், சைத்ரா ஆச்சார் ஹீரோயினாக நடிக்க உள்ளத்தக்க கூறப்படுகிறது. இவர் கன்னட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
டி.ஜே. ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. ஃபகத் ஃபாசில் டப்பிங் செய்யும் புகைப்படத்தை லைக்கா நிறுவனம் எக்ஸ் பாகத்தில் பகிர்ந்துள்ளது.
மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனியை வைத்து ராம் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தில் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல் பரவி வருகிறது.