யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
கனவுகள் ஆழ் மனதின் எண்ணங்களின் வெளிபாடு. அதில் உள்ள அர்த்தங்கள் என்னவென்று கண்டறிய வேண்டும் என்பவர்களுக்கு இங்கே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் நம் கனவில் நமக்குத் தெரிந்த முகங்களுடன் நபர்கள் வருவார்கள். சிலருக்கு இறந்தவர்கள் கனவில் வருவார்கள்; பலருக்கு தற்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் கனவில் வருவார்கள்.
கனவிற்கு பலன்கள் இருக்கிறது என்று நம்மில் பெரும்பாலானோர் நமக்கு வரும் கனவுகள் நிஜத்திலும் அதை சார்ந்து தான் நிகழ்வுகள் இருக்கும் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கை பொய்யும் அல்ல; உண்மையையும் அல்ல.
சில சூழ்நிலைகளை மனிதர்கள் சரியாக கையாளாமல் அதை அதன் போக்கிலேயே விட்டு விடுவதால் நாளை அந்த செயல் என்னவாக முடியுமோ என்ற பதற்றத்தில் இருக்கின்ற பொழுது ஆழ்மனது இதுபோன்ற துரத்தல் சம்பவங்களை நமக்கு படம் போட்டு காட்டுகிறது.
நம்மை சுற்றி இருக்கும் நிகழ்வுகளைப் பற்றி நாம் சிந்தித்துக் கொண்டே இருக்கும் போது அந்த நிகழ்வுகளின் வெளிப்பாடாக கனவு தோன்றுகிறது. அந்த கனவில் வருவது போல சம்பவங்களும் நமக்கு நிகழலாம் அல்லது நிகழாமலும் போகலாம்
உங்களை மற்றவர் துரத்தினால் நீங்கள் பலவீனமானவராக கருதப்படுகிறீர்கள். உங்களுக்கு ஒரு வேலை யார் மீதாவது பயம் இருக்கலாம். இல்லையெனில் எது மீது வேண்டுமென்றாலும் பயம் இருக்கலாம். அந்த பயம் தான் உங்களை துரத்திக் கொண்டிருக்கிறது. தைரியத்துடன் போராடுங்கள். இது ஜோதிட நிபுணர்கள் கருத்துகள்.