Anupama Parameswaran : கதாநாயகிக்கான தகுதி இல்லை என கூறிய ரசிகர்... நச் பதில் கொடுத்த அனுபமா!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் துணை வேடத்தில் நடித்திருந்தார். பிரேமம், வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது.
தமிழில் கொடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனுபாமா பரமேஸ்வரன். இவர் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இளம் கதாநாயகியான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர், ‘நீங்கள் பெரிய கதாநாயகி ஒன்றும் இல்லை, அதனால் தான் பிரம்மாண்ட படங்களில் நடிக்க உங்களுக்கு வாய்ப்பு வரவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு கதாநாயகிக்கான தகுதி இல்லை’ என்று அனுபமாவை சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கு அனுபமா, ‘நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா, நான் கதாநாயகி இல்லை. ஆனால் நான் நடிகை ரகம்.’ என்று பதில் அளித்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அனுபமா புத்திசாலித்தனமாக பதில் அளித்துள்ளதாக பாராட்டி வருகின்றனர்.