8 years of Mass : சூரியா நடித்த ஒரே பேய் படம்.. 8 ஆண்டுகளை கடந்த மாஸ் என்கிற மாசிலாமணி!

மாஸ் திரைப்படத்தின் ஸ்டில்
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த படம் மாஸ் என்கிற மாசிலாமணி.
இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். மேலும் பிரேம்ஜி, பார்த்திபன், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்
ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் நடித்த ப்ரணிதா கொஞ்சம் நேரம் ஸ்கீரினில் வந்தாலும் க்யூட் நடிப்பை வெளிப்படுத்தினார்.
வேல் படத்திற்கு பின், இப்படத்தில்தான் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்தார். இலங்கையை சார்ந்த அப்பா கதாபாத்திரத்திலும், பேய்களை வைத்து சம்பாதிக்கும் மகன் கதாபாத்திரத்திலும் அசத்தினார்.
காஞ்சனா, பீட்சா, அரண்மனை என தொடர்ந்து வெளியான பேய் படங்களுள் பத்தோடு பதினொன்றாக வெளியான மாஸ் மக்களின் கவனத்தை பெறவில்லை. இந்த படத்துடன் வெளியான டிமாண்டி காலனி ஹிட்டானது என்பது குறிப்பிடதக்கது.