Yash : ராவணனாக நடிக்க மறுப்பு தெரிவித்த யஷ்.. இதற்கு காரணம் என்ன தெரியுமா?
ராமாயண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெளியாக உள்ள படம் ஆதிபுருஷ். 750 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ராமாயணத்தை மையமாக வைத்து மற்றொரு படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் எடுக்கப்படவுள்ளதாம். அதில் ராமணாக ரன்பீர் கபூர் சீதையாக ஆலியா பட் நடிக்க உள்ளனர்.
ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் யஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
ராமணாக நடிப்பதை விட ராவணனாக நடிப்பதே சவாலான விஷயம். அதனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.
தற்போது வில்லனாக நடிப்பதை அவர் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் அந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க மாட்டார் என்று நடிகர் யஷ் தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது.
நடிகர் யஷ் ஏற்கெனவே அளித்த பேட்டியில், ரசிகர்களிடம் கவனமாக இருக்க விரும்புகிறேன். அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள் அவர்கள் விருப்பத்துக்கு மாறாக நான் நடிப்பதில்லை ”என்று கூறினார்