HBD Vishal : விஷால் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான படங்கள்!
லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த சண்டக்கோழி. விஷால் கல்லூரி விடுமுறைக்கு நண்பன் வீட்டுக்கு செல்கிறார். அந்த ஊரில் இருக்கும் காசி என்ற வில்லனை விஷால் அடித்துவிட , வில்லன் விஷாலை பழி வாங்க அவர் ஊருக்கு செல்கிறார். விஷால் எப்படி வில்லனிடம் இருந்து தப்பிக்கிறார் என்பதே மீத கதை.
பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன். படத்தில் விஷால் மற்றும் ஆர்யாவுக்கு ஒரு அப்பா போல இருக்கும் ஐனஸ் என்பவரை வில்லன் கொன்றுவிடுகிறார். அவனை விஷாலும் ஆர்யாவும் எப்படி பழி வாங்கினார்கள் என்பதே க்ளைமாக்ஸ்
ஹரி இயக்கத்தில் வெளிவந்த பூஜை. வில்லனுக்கும் விஷால் குடும்பத்தினருக்கும் கோவில் விவகாரத்தில் மோதல் ஏற்படுகிறது. வில்லனிடம் இருந்து விஷால் எப்படி குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பதே மீத கதை
மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன். விஷால் ஒரு துப்பறிவு நிபுணராக இருக்கிறார். அவரிடம் ஒரு பள்ளி சிறுவன் தன்னுடைய நாயை கொன்றவரை பிடித்து தர சொல்லி கேட்கிறார். இதனை விஷால் விசாரிக்கும் போது நாயை கொன்றவர் பல பேரை கொன்ற கொலையாளி என்று தெரிய வருகிறது ,அதன் பின் விஷால் வில்லனை எப்படி பிடிக்கிறார் என்பதே மீத கதை.
பி எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த இரும்புத்திரை. நூதனமாக பணம் திருடும் கும்பலின் செயல்பாடுகளை பற்றியதே இப்படம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி. போன் டைம் டிராவல் கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடி ரூபாயை வசூல் செய்தது