Chiyaan 62 : இன்று மாலை வெளியாகும் சியான் 62 படத்தின் அப்டேட்!
90களில் தன் சினிமா பயணத்தை தொடங்கிய விக்ரமின் ரியல் பெயர் கெனடி ஜான் விக்டர் ஆகும்.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் மாற்றி மாற்றி நடித்து வந்தார்.
நீண்ட காலமாக நடித்து வந்த விக்ரமின் வாழ்க்கையில், திருப்பு முனையாக அமைந்தது சேது திரைப்படம். இது, சியான் என்ற பட்டத்தையும் பெற்று தந்தது.
அதனை தொடர்ந்து தில், காசி, ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அருள், அந்நியன், ராவணன், தெய்வ திருமகள் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். அவர் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு படத்திலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.
தமிழ் சினிமாவின் கனவான பொன்னியின் செல்வன் படத்தில் கரிகால சோழனாக நடித்தார். பின், பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் பிசியானார். இப்படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தற்போது, சியான் 62வது படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார் விக்ரம்.