Dhruva Natchathiram : ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்...’ நீண்ட காத்திருப்புக்கு பின் வெளியான துருவ நட்சத்திரத்தின் இரண்டாம் சிங்கிள்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் “துருவ நட்சத்திரம்”. இந்த படத்தின் ஷூட் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இப்படத்தின் “ஒரு மனம்” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.
அதன்பிறகு 5 ஆண்டுகளாக எந்தவித அப்டேட்டும் படக்குழு சார்பில் வெளியாகவில்லை. பொருளாதார பிரச்சினையால் தாமதாமாக வெளியாகும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன் துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட் முடிவடைந்து விட்டதாகவும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது எனவும் இயக்குநர் கௌதம் மேனன் அறிவித்தார்.
அதைதொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ வெளியாகி விக்ரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.