Kolai Trailer: வெளியானது கொலை படத்தின் மிரள வைக்கும் ட்ரெய்லர்..தகவல்கள் இதோ..!
பாலாஜி.கே.குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் கொலை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிவக்குமார் விஜயன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு கொலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதன் மேக்கிங், வசனங்கள் ஹாலிவுட் தரத்தில் இருந்ததைக் கண்டு ரசிகர்கள் மிரண்டு போயினர். இப்படியான நிலையில் கொலை படத்தின் இறுதியான ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர், எவ்வளவு தான் வாழ்க்கையில் ஜெயிச்சாலும் சாவு கிட்ட நிச்சயம் தோத்து தான் போவோம் என்ற வசனத்துடன் தொடங்குகிறது. இதில் விஜய் ஆண்டனி துப்பறியும் நிபுணராகவும், ரித்திகா சிங் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.
காட்சிகளும் வழக்கமான தமிழ் சினிமாவைப் போல இல்லாமல் வித்தியாசமாக உள்ளது.நிச்சயம் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என விஜய் ஆண்டனி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -