Maaveeran : மாவீரன் படக்குழுவிற்கு விஜய் சேதுபதி செய்த மகத்தான செயல்..பூரிப்பில் சினிமா ரசிகர்கள் !
தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் தற்போது மாவீரன் படம் வெளியாகியுள்ளது.
இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. படத்தின் முதல் கலகலப்பாகவும், இரண்டாம் பாதி கமர்ஷியலாகவும் அமைந்துள்ளது.
இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் தமிழில் மட்டும் ரூ.7.60 கோடி ரூபய் வசூல் செய்து இதுவரை ஐம்பது கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வானத்தில் இருந்து ஒலிக்கும் குரலுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.
இதற்காக இவர் படக்குழுவிடம் இருந்து பணம் எதுவும் வாங்காமல் வாய்ஸ் கொடுத்துள்ளர். மேலும் விஜய் சேதுபதி கூறியதாவது “நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு வாய்ஸ் கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் இது போல் தமிழ் சினிமாவில் அதிக நிகழ்வுகள் நடக்க வேண்டும்.”