HBD Vikram : தடைகளை கடந்து சாதனைகளை படைத்த நடிகர் விக்ரம் பிறந்தநாள் இன்று!
விளம்பர படங்களில் நடித்து வந்த விக்ரம் 1988ம் ஆண்டு ஒளிபரப்பான 'கலாட்டா கல்யாணம்' தான் முதல் திரை அனுபவம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1990ம் ஆண்டு வெளியான 'என் காதல் கண்மணி' படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அப்படம் தோல்வி அடைந்தது.
அதை தொடர்ந்து பல படங்கள் தோல்வி அடைந்ததால் வாய்ப்புக்காக நம்பிக்கையுடன் காத்திருந்தார்.
இடைப்பட்ட காலத்தில் பல நடிகர்களுக்கு டப்பிங் பேசிவந்தார்.
அவரின் 9 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் பாலாவின் இயக்கத்தில் வெளியான 'சேது' திரைப்படம் சிறந்த ஒரு கம்பேக் படமாக அமைந்தது. உடம்பை வருத்தி அவர் நடித்ததை பார்த்து அனைவரும் மிரண்டு போனார்கள்.
அதை தொடர்ந்து அவரின் கேரியர் கிராஃப் உயர துவங்கியது.
படத்திற்கு படம் வித்தியாசமாக தனது தோற்றத்தை மாற்றி நடிப்பது விக்ரமுக்கு கைவந்த கலை. அது ரசிகர்கள் பெரிதும் ஈர்த்தது.
தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடும் சீயான் விக்ரமுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -