Vijay Honors Students : 'மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லை..' பிரமாண்டமாய் நடைபெற்ற மாணவர்கள் விருது விழா!
நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து தானே காரை ஓட்டி நிகழ்ச்சி நடக்கும் ஆர்.கே கன்வென்ஷன் சென்டரை வந்தடைந்தார்.
அரங்கிற்குள் வந்த விஜய் மேடையில் அமரமால் மாணவர்களுடன் மாணவர்களாக கீழே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
அப்பொழுது அருகில் இருந்த மாற்றுத்திறனாளி மாணவர் வழங்கிய பரிசை உடனே பிரித்து பார்த்த விஜய் அம்மாணவரை கட்டி தழுவினார்.
நடிகர் விஜய் பேசுகையில் அசுரன் படத்தின் உள்ள வசனம் ஒன்றை மேற்கோள் காட்டினார்.
விஜய் பேசியதாவது, ‘மாணவர்கள் அம்பேத்கர்,பெரியார்,காமராஜரை பற்றி படிக்க வேண்டும் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளில் எது உண்மை என்று தெரிந்து கொள்ள பாடப் புத்தகங்களைத் தாண்டி நீங்கள் படிக்க வேண்டும்’
‘முக்கியமாக நீங்கள் உங்கள் பெற்றோரிடம் இனி காசு வாங்காமல் ஓட்டுபோட வேண்டும் என்று சொல்ல வேண்டும்’ என்றார் விஜய். பின்னர் விருதுகள் வழங்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் 600/600 பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த மாணவி நந்தினுக்கு வைர நெக்லஸ் வழங்கினார் விஜய்.