Maamannan Success Meet: ’மாமன்னன் படத்தின் இண்டெர்வெல் சீன் இவ்வாறு தான் உருவானது..’ சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்!
மாமன்னன் படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் வடிவேலு, நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுடன் உரையாடினர்.
அப்போது பேசிய உதயநிதி, ”இது என் கடைசி மேடைனு நினைச்சேன். கண்டிப்பா 50ஆவது நாள் விழா உண்டு” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் “இண்டர்வெல் ப்ளாக் சண்டை பத்தி நிறைய பேர் பேசுகிறார்கள், அந்த ஃபைட் மூன்று நாள்களுக்கு திட்டமிட்டு முடிக்க முடியாமல், தொடர்ந்து 4 நாள்கள் தாண்டி இழுத்து, 5ஆவது நாள் முடிந்தது.” என்றார்.
கூடுதலாக “அந்த இண்டெர்வெல் காட்சியை நாங்கள் ரொம்ப ஜாலியா எடுத்தோம், சண்டைக் காட்சி முடிஞ்சது நினைச்சப்போ மறுபடி ரெண்டு மூணு ஷாட் வேணும்னு சொல்லி எடுத்தாங்க” என்று கூறியுள்ளார்.
மேலும் ”மாமன்னன் படத்தில் துப்பாக்கி தவிர அனைத்து பொருட்களும் ஒரிஜினல், டம்மி எதுவும் பயன்படுத்தவில்லை” என்ற சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.