Salaar Collection : ‘சலார் 2000 கோடி ரூபாயை வசூல் செய்யும்..’ அடித்து பேசிய தெலுங்கு சினிமா பிரபலம்!
ஜோன்ஸ் | 10 Jul 2023 11:21 AM (IST)
1
கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி இந்திய சினிமாவின் டிரெண்ட் செட்டராக உருவான பிரஷாந்த் நீல் தற்போது இயக்கியிருக்கும் படம் சலார்.
2
பாகுபலி பிரபாஸ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார்.
3
ஏற்கனவே இப்படத்தின் டீசர் ஜுலை 6ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
4
அதைதொடர்ந்து காமெடி நடிகர் சப்தகிரி டப்பிங் வேலைகள் முடித்துவிட்டு கூறுகையில், “சலார் படம் இந்திய சினிமாவில் புதிய சாதனையை படைக்க உள்ளது.”
5
இப்படம் கிட்டதட்ட சூமார் 2000 கோடி வசூல் செய்யும் என உறுதியாக நம்புகிறேன் என கூறினார்.
6
சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் என தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் பிரபாஸிற்கு பிரஷாந்த் நீலின் சலார் கைக்கொடுக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது.