Garudan Soori : திரையில் பொன்னாய் மின்னும் சூரி.. வரவேற்புகளை குவித்து வரும் கருடன் படம்!
சினிமா கனவுகளை கையில் ஏந்திக்கொண்டு 1996ல் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தார் சூரி. எடுத்தவுடன் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. பெயர் தெரியாத சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
வெண்ணிலா கபடி குழு படத்தில் வரும் பரோட்டா சாப்பிடும் போட்டியின் மூலம், இவருக்கான் அடையாளமும் அடைமொழியும் கிடைக்கப்பெற்றது.
தொடர்ந்து பல தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்தார். பின், வெற்றி மாறனின் விடுதலை படத்தில் எதிர்பாராத நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுக்களை பெற்றார்.
இதே ட்ராக்கில் கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்களை தேர்வு செய்து நடித்தார். இந்த இரண்டு படங்களும் விடுதலை படமும் சர்வதேச திரைப்பட விழாவில், ஸ்கிரீன் செய்யப்பட்டுள்ளது. பார்க்கும் படத்தில் எல்லாம் காட்சி தரும் சூரி, உலக மக்களின் கவனத்தை பெற்றார்.
இந்நிலையில் இவரது நடிப்பில் கருடன் படம் வெளியாகியுள்ளது. சினிமா வட்டாரத்திலும், பொது மக்களின் மத்தியிலும் நல்ல விதமான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.
சுந்தர பாண்டியனில் சசிகுமாருக்கு நண்பனாக நடித்த சூரி, இன்று திரையில் அவர் நண்பருடன் ஹீரோவாக பொன்னாக மின்னி வருவதற்கு வாழ்த்துகள்!