Indian 2 : 'தலைவரே...தலைவரே...தலைவரே....' - உலக நாயகனுக்கு வில்லனாகும் எஸ்.ஜே சூர்யா !
இந்தியன் படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது
இந்தியன் தாத்தாவாக கலக்கிய நடிகர் கமல்ஹாசனுக்கு, இப்படம் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது
பல்வேறு இடையூறுகளை கடந்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டு தொடங்கியது
இந்தப் படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், ஜி.மாரிமுத்து, கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்
இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் தனக்கென ஏற்ற வில்லனிசம் நடிப்பை வெளிபடுத்திருந்தார் தற்போது இந்தியன் 2 படத்தின் இவர் வில்லனாக நடித்திருப்பது சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது