Aishwaryaa Rajinikanth : 'உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி..' ஐஸ்வர்யா ரஜினியின் நெகிழ்ச்சி பதிவு !
தனுஷ் நடித்த '3’ திரைப்படம், கௌதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் திரைப்படம், ‘லால் சலாம்'
இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு பாத்திரத்தில் நடிக்கிறார்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் பிரதான கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கின்றனர்
முன்னதாக ரஜினிகாந்தின் மொய்தீன் பாய் கெட் அப்புடன் லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கடும் ட்ரோல்களை சந்தித்தது.
தற்போது படத்தின் இயக்குநரும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினி தனது அப்பாவுடன் இணைந்து பனியாற்றும் தருணத்தை பற்றி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் ‘என்னுடைய சிறு வயது முதல் உங்களைப் பார்த்து வளர்ந்துள்ளேன் இன்று வரை நான் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நினைத்துப் பார்த்ததுமில்லை. நாட்கள் கடக்க கடக்க உங்கள் மீதான காதல் அதிகம் ஆகிறது’ என்று உணர்ச்சி பொங்க அதில் பதிவிட்டுள்ளார்.ர்