Aalap Raju : தெரிந்த பாடல்கள் தெரியாத பாடகர்..யார் இந்த ஆலப் ராஜு?
தமிழ் சினிமாவில் பல பிரபலமான படல்களை பாடியவர் ஆலப் ராஜு. இவர் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றுள்ளார். அவர் குரலில் வெளிவந்த ஹிட் பாடல்களை இங்கு காணலாம்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் எங்கையும் காதல் படத்தில் எங்கையும் காதல் என்ற இன்ட்ரோ பாடலை பாடியுள்ளார் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அகிலா அகிலா என்ற பாடலையும் பாடியுள்ளார்.
நண்பன் படத்தில் எந்தன் கண் முன்னே என்ற பாடலை பாடியுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் காதல் ஒரு பாடல் பாடியுள்ளார்.
மாற்றான் படத்தில் தீயே தீயே பாடலும், என்னை அறிந்தால் படத்தில் மாயா பஜார் என்ற பாடலும் பாடியுள்ளார்.
டி இமான் இசையில் மரம் கொத்தி பரவை படத்தில் ஜல் ஜல் ஓசை பாடலையும், முதல் இடம் படத்தில் பப்பரா பப்பரா என்ற பாடலையும் பாடியுள்ளார்.
ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் மழை பொழியும் பாடலை பாடியுள்ளார். கிருஷ்ண குமார் இசையில் முகமூடி படத்தில் வாய மூடி சும்மா இருடா என்ற பாடலை பாடியுள்ளார்