Maaveeran Audio launch : மாவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு? எப்போது?..விவரம் இங்கே!
தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’
மாவீரன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் மாவீரன் திரைப்படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்யும் உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது
தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 2ஆம் தேதி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது
அதைதொடர்ந்து மாவீரன் படத்தின் 2ஆவது சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது