Jawan Trailer : ஷாருக்கான் படத்தின் ட்ரெய்லர் ரீலிஸ் தேதி அறிவிப்பு!
தமிழில் விஜய் நடித்த தெறி, மெர்தமிழில் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லீ முதன் முதலாக இந்தியில் இயக்கும் படமே ஜவான்.சல், பிகில் படங்களை இயக்கி இருந்த அட்லீ முதன் முதலாக இந்தி திரையுலகில் தடம் பதித்த படம் தான் ஜாவன் திரைப்படம்.
ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர். அத்துடன் பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ‘வந்தா எடம்’ மற்றும் ’ஹய்யோடா’ பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படத்தின் மூன்றாவது சிங்கிளான “ராமையா வஸ்தாவையா”வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதை தொடர்ந்து, நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஜவான் படத்தின் ட்ரெயிலர் வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்படுள்ளது.
இந்த அப்டேட்டை ஷாருக்கான் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.