Dhanush 51 : தனுஷூடன் கைகோர்க்கும் நாகார்ஜுனா.. பிறந்தநாள் ஸ்பெஷலாக வந்த புது அப்டேட்!
ஜோன்ஸ் | 29 Aug 2023 03:29 PM (IST)
1
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.
2
இதன் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில், இப்படத்தின் ரிலீஸிற்காக தனுஷ் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.
3
கேப்டன் மில்லரை தொடர்ந்து டி50 படத்தில் தனுஷின் இயக்கத்தில் எஸ்கே சூர்யா, அபர்ணா முரளி, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
4
இதனையடுத்து இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.
5
இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிக மந்தன நடிப்பார் என்ற அப்டேட் ஏற்கனவே வெளியானது.
6
தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகார்ஜுனா இந்த படத்தில் நடிக்க உள்ளார். இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம்.